search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் குளறுபடியால் சாலை வரி செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதி
    X

    ஆன்லைன் குளறுபடியால் சாலை வரி செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதி

    ரெட்டேரி ஆர்.டி.ஓ.ஆபீசில் ஆன்லைன் குளறுபடியால் சாலை வரி செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதியடைந்துள்ளனர். #Rtooffice

    சென்னை:

    கார், வேன் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கும் லாரி, ‘ட்ரக்’ போன்ற கனரக வாகனங்களுக்கும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என சாலை வரி 3 விதமாக வசூலிக்கப்படுகிறது.

    சாலை வரிசெலுத்தும் முறை கடந்த மாதம் வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக செலுத்தும் முறை இருந்து வந்தது. ஆனால் இந்த மாதம் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாத காலாண்டு வரி இந்த மாதம் முதல் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் எப்.சி. காட்ட வேண் டிய வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தினால் மட்டுமே எப்.சி.க்கு செல்ல முடியும்.

    ஆனால் கடந்த 1-ந்தேதி முதல் ஆன்லைனில் சாலை வரி செலுத்துவதற்கு வாகன உரிமையாளர்கள் தயாராக இருந்தும் சாப்ட்வேர் பிரச்சினையால் செயல்படாமல் உள்ளது. இதனால் 10 நாட்களாக சாலை வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ரெட்டேரி வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் மட் டும் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கவுண்டர்களில் பணமாகவோ, வரை வோலையாகவோ பெற்றுக் கொள்கிறார்கள். ரெட்டேரி ஆபீசில் பணம் பெற மறுத்து ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    ஆன்லைன் குளறுபடியை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் வாகனங்களை இயக்க முடியாமலும், எப்.சி. காட்ட முடியாமலும் உரிமையாளர்கள் திண்டாடுகிறார்கள்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர் வக்கீல் ஜெ.சத்திய மூர்த்தி கூறியதாவது:-

    வாகனங்களுக்கான சாலை வரியை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று ரெட்டேரி ஆர்.டி.ஓ. தெரிவித்த போதிலும் அதனை செலுத்த கடந்த 10 நாட்களாக முயற்சி செய்கிறோம். ஆனால் பணம் செலுத்த முடியவில்லை. சாப்ட்வேர் குளறுபடியால் அதிக கட்டணம் செலுத்து மாறு காட்டுகிறது.

    ஆன்லைனில் செலுத்த முடியாமல் நூற்றுக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளோம். சாப்ட்வேர் பிரச்சினை என்றால் கவுண்டரில் பணத்தை பெற்று கொண்டு வாகனங்களை எப்.சி.க்கு அனுமதிக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யாமல் ஆன்லைன் இன்று சரியாகி விடும் என்று சாக்கு போக்கு சொல்லி வருகிறார்கள். இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறோம். மற்ற வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் இந்த பிரச்சினை இல்லை. ரெட்டேரியில் மட்டும் தான் உள்ளது. ஆதலால் கவுண்டரில் சாலை வரியை பெறுவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Rtooffice

    Next Story
    ×