என் மலர்

  செய்திகள்

  சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை
  X

  சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். #IASAcademy #ShankarSuicide
  சென்னை:

  சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கரன் (வயது45).

  திருச்செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த இவர் மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  இவருக்கும் மனைவிக்கும் சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

  நேற்று வழக்கம் போல் அண்ணாநகரில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து விட்டு இரவில் வீட்டுக்கு சென்றார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

  அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சங்கர் மனம் வெறுத்து வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

  இதை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் துணையுடன் சங்கர் உடலை இறக்கி அருகில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து மனைவியும் 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

  அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தி வந்த சங்கரன் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை கூறுவார்.

  குறுகிய காலத்தில் புகழ் பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று மத்திய- மாநில அரசு பணிகளில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாக உள்ளனர். இப்போது 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இவரது மையத்தில் படித்து வருகின்றனர்.

  அவரது பயிற்சி மையத்தில் படித்த கருணாகரன் கூறியதாவது:-

  எங்கள் பயிற்சி மைய இயக்குனர் சங்கரன் தென்னிந்திய அளவில் எத்தனையோ அதிகாரிகளை உருவாக்கியவர்.

  பணம் இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வந்தார். அவர் ஒரு பயிற்சியாளராக இல்லாமல் அனைவரிடமும் நண்பராக பழகியவர்.

  தமிழக மாணவர்கள் ஒவ்வொருவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வர வேண்டும் என்பதில் தீராத ஆசை கொண்டவர். அவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் ஒரு சிலரைதான் காண முடியும். அப்படிப்பட்டவரை இழந்தது எங்களுக்கு பெரும் துயரமாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார். #IASAcademy #ShankarSuicide
   
  Next Story
  ×