என் மலர்

  செய்திகள்

  மதியம்பட்டி பாலத்தின் மீது 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சி.
  X
  மதியம்பட்டி பாலத்தின் மீது 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் பாய்ந்து செல்லும் காட்சி.

  திருமணிமுத்தாற்றில் வெள்ளம்- 10 அடி உயரத்திற்கு நுரையுடன் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுடன் 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. #ThirumanimutharuRiver
  ராசிபுரம்:

  ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதேபோல் வெண்ணந்தூர், மதியம்பட்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று சேலத்தில் பெய்த கனமழையால் சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்காமல் மழை நீரில் கலந்துவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.

  இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி தரை பாலத்தின் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுடன் 10 அடி உயரத்திற்கு நுரையுடன் கூடிய தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதியம்பட்டி தரைப்பாலம் மூழ்கியது. மேலும் மதியம்பட்டி தரைப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. தரைப்பாலம் நுரையுடன் கூடிய தண்ணீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் வேறு வழியாக சென்றன.


  மழைக் காலங்களில் இது போன்று மதியம்பட்டி தரைப்பாலத்தின் வழியாக நுரையுடன் கூடிய தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் தரைப்பாலத்தை மேல்மட்ட பாலமாக அமைத்து தரவேண்டும் என பல முறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனியாவது விரைந்து மதியம்பட்டி தரைப்பாலத்தை மேல்மட்ட பாலமாக கட்டி தந்து மக்களின் போக்குவரத்துக்கு உதவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #ThirumanimutharuRiver

  Next Story
  ×