என் மலர்

  செய்திகள்

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி அனுமதி
  X

  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  கோவை:

  கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

  இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

  அங்கு டாக்டர்கள் மாணவியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

  இதனையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 8 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  Next Story
  ×