என் மலர்

  செய்திகள்

  தேனி அருகே தேர்வுக்கு பணம் கட்ட சென்ற கல்லூரி மாணவி மாயம்
  X

  தேனி அருகே தேர்வுக்கு பணம் கட்ட சென்ற கல்லூரி மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே தேர்வுக்கு பணம் கட்ட சென்ற கல்லூரி மாணவி மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
  தேனி:

  தேனி அருகே மேட்டு வலவு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 22). ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று தேர்வுக்கு பணம் கட்டி வருவதாக தனது தந்தையிடம் கூறிச் சென்றுள்ளார். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர்.

  எங்கு தேடியும் மாணவி பிரியதர்ஷினி கிடைக்காததால் அவரது தாய் மல்லிகா தனது மகளை யாரேனும் கடத்தி சென்றிருக்க கூடுமோ? என்ற சந்தேகத்தில் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

  இந்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×