என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்கா ஊழல் வழக்கு - கைதான அதிகாரி சிறையில் அடைப்பு
Byமாலை மலர்1 Oct 2018 3:24 PM IST (Updated: 1 Oct 2018 3:24 PM IST)
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #GutkhaScam
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தனர். இதற்காக பெரும் தொகை அமைச்சர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த செப்டம்பர் 5ந்தேதி குட்கா கிடங்கு உரிமையாளர்கள், மாதவராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.
பின்னர், கடந்த மாதம் 25-ந்தேதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியுமான சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர், இவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில், விசாரணை முடிந்து, இன்று காலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சிவக்குமாரை ஆஜர்படுத்தினர். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். #GutkhaScam

Next Story
×