search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தனபள்ளி பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
    X

    உத்தனபள்ளி பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

    சூளகிரி அருகே உத்தனபள்ளி பகுதியில் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பனஹள்ளி:

     கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி உத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சாந்தமோகன் (வயது 40), ஆசிரியர். இவரது மனைவி வைதேகி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் காலை வழக்கம்போல் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தனர்.

    சுமார் காலை 9 மணி அளவில் இவர்களது வீட்டிற்குள் 6 அடி நீளம் கொண்ட நாகபாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதை கண்டு அலறியடித்து அவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். பாம்பை பிடிக்க மக்கள் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. பின்பு சமூக ஆர்வலர்களால் ஓசூரில் உள்ள பாம்பு பிடி மன்னன் வெங்கடேஷ் (30) வரவழைக்கப்பட்டார். அவர் சில நிமிடத்துக்குள் பாம்பை வீட்டிற்கு வெளியில் வரவைத்து லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

    பின்னர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    பாம்புகளை தொந்தரவு செய்ய வேண்டாம் பாம்பு பிடிக்க சிலர் குறைந்த அளவான தொகை பணம் தருவது உண்டு. அந்த பணத்தை ஓசூர் பகுதியில் உள்ள அனாதை இல்லத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்கு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வாங்கி கொடுத்து விடுவேன் என்றார். மேலும்,  பாம்புகளை பார்த்தால் அதை  தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களை அழைத்தால்போதும். அதை பிடித்து காட்டில் விட்டு விடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×