என் மலர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் திரிந்த பெண் அமெரிக்கா அனுப்பப்பட்டார்
Byமாலை மலர்16 Sept 2018 5:21 PM IST (Updated: 16 Sept 2018 5:21 PM IST)
காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர்களால் சீரழிக்கப்பட்டு, போதையில் அரை நிர்வாண கோலத்தில் திரிந்த பெண் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உதவியுடன் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். #Americanwoman
சென்னை:
வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விமல். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பெண் வெல்லா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் வேளச்சேரியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கப் பெண் வெல்லா காஞ்சிபுரம் அருகே வெள்ளைக்கேட் பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக போதையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெல்லாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
போதை தெளிந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் விமலுக்கும், வெல்லாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பத்தன்று இருவரும் போதையில் இருந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல் காரில் வெல்லாவை வெளியே அழைத்து சென்று இருக்கிறார். காஞ்சிபுரம் வெள்ளைக்கேட் பகுதியில் சென்றபோது காரில் இருந்து வெல்லாவை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டார்.
அங்கு போதையில் சுற்றிய வெல்லாவை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் அவரை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் அருகே விட்டு சென்றுள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பகுதி மக்களிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் போலீசுக்கு தெரிவித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வெல்லாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு விமல் இல்லை. வீடு காலியாக இருந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சீபுரம் போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 ஆட்டோ டிரைவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கணவர் விமலையும் தேடி வருகிறார்கள்.
வெல்லாவை கிழக்கு கடற்கரை சாலை அருகே பனையூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்திருந்தனர்.
தங்கள் நாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த துயர நிலையை செய்திகள் வாயிலாக அறிந்த சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் காப்பகத்தில் இருந்து வெல்லாவை அழைத்து சென்றனர். அவருக்கு தேவையான பயண ஆவணங்களை உடனடியாக தயாரித்த அதிகாரிகள் அவரை சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண் அமெரிக்காவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Americanwoman ##Americanwomaninkanchipuram

Next Story
×
X