என் மலர்
செய்திகள்

மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது
மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை மங்கலக்குடி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் சூதாடிய நபர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சூதாடியதாக ஜவகர் புரத்தைச் சேர்ந்த சின்னசாமி (50), அடைக்கலம் (46), ஒத்தக்கடையைச் சேர்ந்த பாலமுருகன் (43), வெள்ளையன் (38), சரவணன் (40), பரமசிவன் (43), செந்தில் நாதன் (30), முனீஸ்வரன் (33), மூர்த்தி (52), கஜேந்திரன் (59), பாண்டியராஜன் (57), ரவிச்சந்திரன் (49) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் குறித்து ரூ.86 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






