என் மலர்

  செய்திகள்

  காரிமங்கலம் அருகே விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலி
  X

  காரிமங்கலம் அருகே விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலியானார்.
  காரிமங்கலம்:

  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரியகுழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பெரியசாமி (வயது 28). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தருமபுரியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் பெரியசாமி சென்றார். அப்போது காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி அருகே வந்தபோது பின்னால் அடையாள தெரியாத வாகனம் ஒன்று பெரியசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

  இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து போன பெரியசாமிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×