என் மலர்

  செய்திகள்

  எழும்பூரில் நடைமேம்பாலம் அகலப்படுத்தும் பணி - 2 நாட்கள் மின்சார ரெயில் சேவை மாற்றம்
  X

  எழும்பூரில் நடைமேம்பாலம் அகலப்படுத்தும் பணி - 2 நாட்கள் மின்சார ரெயில் சேவை மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எழும்பூரில் நடைமேம்பாலம் அகலப்படுத்தும் பணி காரணமாக 2 நாட்கள் மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #ElectricTrain
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

  சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தை அகலப்படுத்த என்ஜினீயரிங் தொடர்பான பணிகள் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் மறுநாள் (2-ந் தேதி) காலை 5.30 மணி வரை 6 மணி நேரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  அதன் விவரம் வருமாறு:-

  செப்டம்பர் 1-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.30 மணி, செப்டம்பர் 2-ந் தேதி காலை 4, 4.20, 4.40, 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  இதேபோல் செப்டம்பர் 1-ந் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.05, 11.30, 11.59 மணி, மறுநாள் (2-ந் தேதி) காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  இதேபோல செப்டம்பர் 1-ந் தேதி செங்கல்பட்டில் இருந்து இரவு 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

  செப்டம்பர் 2-ந் தேதி சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55, 4.40, 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #ElectricTrain
  Next Story
  ×