search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு பாசன கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி - மாணிக்கம் எம்எல்ஏ பார்வையிட்டார்
    X

    பெரியாறு பாசன கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி - மாணிக்கம் எம்எல்ஏ பார்வையிட்டார்

    வாடிப்பட்டி அருகே பெரியாறு பாசன கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணியினை மாணிக்கம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாதம்பட்டி, அய்யர் கண்மாய்களில் இருந்து மாறுகால் செல்லும் தண்ணீர் வடகரை கண் மாய்க்கு செல்ல பெரியாறு பாசன கால்வாய் கீழ்புறம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் மேல்பகுதியில் உள்ள சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டதால் பெரியாறு பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீர் அந்த உடைப்பு வழியாக கரையின் மறு பகுதியில் இருந்த வயல் வெளிகளுக்குள் புகுந்து வெளியேறி கல்ஓடை பாலம் வழியாக வடகரை கண்மாய்க்கு சென்றது.

    தகவல் அறிந்த பெரியாறு வைகை பாசன கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் செல்லையா, மாயகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கால்வாய் அடிப்பகுதியில் பெட் அமைத்து சீர்செய்து அதன்பின் உடைப்பு விழுந்த பகுதியில் 12 மணி நேரத்தில் சிலாப்புகள் அமைத்து சரிசெய்தனர்.

    இந்த பணியினை மாணிக்கம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் கூறும் போது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பாடத வகையில் கால்வாய் உடைப்பு உடனே சீரமைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு, பணிக்காக அடைக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது.

    மேலும் இந்த கால்வாயில் இருபுறங்களிலும் சமூக காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூங்கில் மரங்களை வனத்துறை மூலம் அகற்றிடவும், அதன் பின் அந்த பகுதியில் சேத மடைந்துள்ள சிலாப்புகள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×