search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் காரில் கடத்தப்பட்ட ரூ.2.50 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
    X

    திருப்பூரில் காரில் கடத்தப்பட்ட ரூ.2.50 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

    திருப்பூரில் காரில் கடத்தப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    கோவை - திருப்பூர் சாலையில் தெக்கலூர் அருகே உள்ள வஞ்சிப்பாளையத்தில் இன்று காலை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ் செல்வன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். காரில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 500 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். காரை ஒட்டி வந்தது வட மாநிலத்தை சேர்ந்த சோபாராம் (29) என்பவர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது கோவையில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    கோவையில் யாரிடம் இருந்து புகையிலை பொருட்களை சோபாராம் வாங்கி வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×