என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    குன்னம் அருகே கல்லூரி மாணவி மாயம்

    குன்னம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் அகிலா (வயது 19). இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பாண்டியன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    அகிலாவை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது காதல் வலையில் சிக்கி மாயமானாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×