என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வீடு புகுந்து டி.வி.- செல்போன்கள் திருட்டு
    X

    மதுரையில் வீடு புகுந்து டி.வி.- செல்போன்கள் திருட்டு

    வீடு புகுந்து டி.வி.-செல்போன்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை-தேனி மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 49). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். சம்பவத்தன்று வீடு திரும்பிய ராமன்  வீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீல் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தல்லாகுளம் சொக்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிசெல்வன் (22). இவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார்.

    அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 3 செல்போன்களை திருடிச் சென்றனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×