search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் போலீஸ் என மிரட்டி தொழிலாளியிடம் நகை, பணம் பறிப்பு
    X

    நாகர்கோவிலில் போலீஸ் என மிரட்டி தொழிலாளியிடம் நகை, பணம் பறிப்பு

    நாகர்கோவிலில் போலீஸ் என மிரட்டி தொழிலாளியை கடத்தி நகை, பணத்தை பறித்து சென்றவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் தொழிலாளி ஒருவர் தனியாக நின்றார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து தொழிலாளி அருகில் நின்றார். அவர் தொழிலாளியிடம், தான் ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் என்று கூறினார்.

    தொழிலாளி மீது புகார் வந்திருப்பதால் அவரிடம் விசாரிக்க வேண்டும் எனவும், தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படியும் கூறினார்.

    தொழிலாளி அதற்கு மறுக்கவே, மோட்டார் சைக்கிள் வாலிபர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பின்னர் வெள்ளமடம், சடயன்குளம் பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்கு சென்றதும் தொழிலாளியின் நகை, பணத்தை கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே முகத்தில் மயக்கப் பொடி தூவினார். இதில் தொழிலாளி மயங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த செயின், கையில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் சட்டைப் பையில் இருந்த பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். 

    தொழிலாளியின் கையில் அணிந்திருந்த தங்க காப்பையும் அந்த வாலிபர் கழற்ற முயன்றுள்ளார். அது முடியாததால் அந்த வாலிபர் தொழிலாளியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்று உள்ளார். வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாலையோரம் அழுதபடி நின்றார். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து நடந்த சம்பவங்களை கூறி தன்னை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறும், சம்பவம் பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுக்கும்படியும் கூறினார்.

    காரில் வந்தவர் தொழிலாளியை  வடசேரி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவரது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தொழிலாளியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசிலும் புகார் செய்தனர்.
    Next Story
    ×