என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது
    X

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரகங்களிலும் வன விலங்குகள்  கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தி, பவானி சாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், டி.என்.பாளையம், கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த 7 வனச்சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு வனச்சரகத்திலும் வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்று வனத்துக்குள் புகுந்துள்ளனர்.

    இவர்கள் வனப்பகுதியில் உள்ள நீர் நிலை, கால்தடம், விலங்குகளின் எச்சம் ஆகியவற்றை வைத்து வன விலங்குகளை கணக்கெடுப்பார்கள். இந்த வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணி முடிந்ததும் எந்த விலங்குகள் அதிகரித்து உள்ளது என்றுதெரியவரும்.

    வனவிலங்குகள் புதிய கணக்கெடுப்பு முடிவுகள் சென்னை தலைமை வன அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    Next Story
    ×