என் மலர்
செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
தங்கச்சிலை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
சென்னை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா (52) கைது செய்யப்பட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை திங்கட்கிழமை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து பெண் என்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரி கவிதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து திங்கள்கிழமை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold

இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரி கவிதாவுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எந்த ஆதாரமும் இல்லை என கவிதா தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Next Story