என் மலர்

  செய்திகள்

  100 நாள் வேலை கேட்டு தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை
  X

  100 நாள் வேலை கேட்டு தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  100 நாள் வேலை கேட்டு திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். #VillagersSiege #Ruralworkplan

  தொட்டியம்:

  திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்திற் குட்பட்ட அலகரை ஊராட்சி கோடியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும். சுமார் 11 மாதங்களாக எந்த வேலையும் வழங்காததால் பெரும் அவதிபட்டு வருவதாக கூறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  இது பற்றி தகவலறிந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரும் ஆணையருமான செந்தில் குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அலகரை ஊராட்சி கோடியாம்பாளையத்தில் வாய்க்கால் தூர் வாரும் பணி, மண் வரப்பு அமைக்கும் பணி, கசிவு நீர் குட்டை வெட்டும் பணி, சாலை அமைக்கும் பணிகளுக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது.

  ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் நிர்வாக அனுமதி பெற்று ஒரு வார காலத்திற்குள் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.கிராம மக்கள் முற்றுகை போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #VillagersSiege #Ruralworkplan

  Next Story
  ×