என் மலர்

  செய்திகள்

  சென்னிமலை ரோட்டில் கார் பழுது பார்க்கும் கடையில் பணம், கம்ப்யூட்டர் திருட்டு
  X

  சென்னிமலை ரோட்டில் கார் பழுது பார்க்கும் கடையில் பணம், கம்ப்யூட்டர் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு சென்னிமலை ரோட்டில் கார் பழுது பார்க்கும் கடையில் பணம், கம்ப்யூட்டரை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஈரோடு:

  ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரெயில்வே டீசல் லோகோ ஷெட் எதிரே கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது.

  இங்கு டயர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கார் டயர் அலைன் மெண்ட்டும் இங்கு பார்க்கப்படுகிறது.

  இதன் உரிமையாளராக சசிகலா (வயது 31) என்பவர் உள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையை மூடி விட்டு சென்றனர்.

  இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகர ஷீட் உடைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.37 ஆயிரம் பணம், கார் டயர் அலைன் மெண்ட் சரி பார்க்கும் நவீன கம்ப்யூட்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

  மேலும் 30 டயர்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அங்கு 3 கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தன. அந்த 3 கேமிராக்களையும், கேமிரா காட்சிகளை பதிவு செய்யும் மிஷினையும் திருடி சென்றுவிட்டனர்.

  இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

  கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

  இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
  Next Story
  ×