என் மலர்

  செய்திகள்

  தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
  X

  தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  மதுரை:

  மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பாளர் வீராசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  மதுரை கோட்டத்தில் விருதுநகர் பிரிவுக்கு உட்பட்ட கடம்பூர்-வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு இடையே நாளை (1-ந் தேதி) தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அதன் வழியாக ரெயில்கள் செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி சென்னை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மதுரை- நெல்லை இடையேயான சேவை பகுதி நேரமாக இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

  திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22628) ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12.50 மணிக்கு கிளம்பும்.

  பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மதுரை-நெல்லை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து 2 1/2 மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×