என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அருகே கடன் வாங்கி தருவதாக ரூ.37 லட்சம் மோசடி
  X

  பெரியகுளம் அருகே கடன் வாங்கி தருவதாக ரூ.37 லட்சம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.37 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  தேனி:

  விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது61). இவர் அதே பகுதியில் பருப்பு மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் வேல்முத்து (47), காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ் ஆகியோர் லோடுமேன்களாக வேலை பார்த்து வந்தனர்.

  இவர்களிடம் வேல்முருகன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கடந்த 7.5.2018-ம் தேதி பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து வந்தார்.

  அங்கு அவர்களிடம் பல்வேறு விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கி விட்டு அனுப்பி விட்டார். அவர்களது பெயரில் ரூ.37 லட்சத்து 46 ஆயிரம் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

  கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேல்முத்து உள்பட தொழிலாளர்கள் 5 பேருக்கும் அவர்கள் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.40 லட்சத்து 14 ஆயிரத்து 765 கட்ட வேண்டும் என வங்கியில் இருந்து கடிதம் வந்தது.

  இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் அவர்கள் சென்று கேட்டபோது பருப்பு உள்ளிட்ட நவதானிய பொருட்கள் இருப்பு வைக்கும் குடோனுக்காக கடன் பெற்றுக்கொண்டதாகவும், அந்த தொகையை வட்டியுடன் செலுத்துமாறும் கூறி உள்ளனர்.

  அப்போதுதான் தங்கள் பெயரில் கடன் பெற்று வேல்முருகன், அவரது மகள் இந்துமதி, உறவினர் செண்பகன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து வேல்முருகனிடம் அவர்கள் கேட்டபோது, 5 பேரையும் ஒரு காரில் அழைத்து வந்து ஜெயமங்கலம் அருகே இறக்கி விட்டு இது குறித்து போலீசில் புகார் அளித்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

  இது குறித்து வேல்முத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் தென்கரை போலீசார் கடன் வாங்கி தருவதாக ஏமாற்றிய வேல்முருகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×