search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் 5-வது நாள் ஸ்டிரைக் - டேங்கர் லாரிகள் சங்கம் ஆதரவு
    X

    லாரிகள் 5-வது நாள் ஸ்டிரைக் - டேங்கர் லாரிகள் சங்கம் ஆதரவு

    லாரி ஸ்டிரைக் 5-வது நாளாக நீடித்து வருவதையொட்டி போராட்டத்துக்கு டேங்கர் லாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது. #LorryStrike #TankerLorry

    சென்னை:

    டீசல் விலை உயர்வு, சுங்கசாவடி கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 20-ந்தேதி முதல் நாடு தழுவிய லாரி ‘ஸ்டிரைக்’ நடைபெற்று வருகிறது. இதனால் லாரிகள் நிறுத்தப்பட்டு சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று 5-து நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்து வருகிறது.

    இந்தியா முழுவதும் சரக்குகள் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பல லட்சம் கோடி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. காய்கறி, பழங்கள், உணவு பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு அடைந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சென்னையில் 4,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளன.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் தினமும் 500 லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

     


    தற்போது லாரி ஸ்டிரைக்கையொட்டி காய்கறி, பழங்கள் வரத்து பாதியாக குறைந்துள்ளது. சிறிய, மினி லாரிகள் மூலம் காய்கறி, பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் காய்கறி, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் நேற்று மாலை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் யுவராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இன்று 5-வது நாளாக லாரி ஸ்டிரைக் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

    லாரி ‘ஸ்டிரைக்’ நீடித்து வருவதையொட்டி போராட்டத்துக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி மற்றும் டிரைலர் லாரி சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இன்று மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடுகின்றனர்.

    இதனால் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஏற்றி செல்வதில் பாதிப்பு உருவாகும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும். வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு உருவாகும். #LorryStrike #TankerLorry

    Next Story
    ×