என் மலர்
செய்திகள்

பெங்களூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்த வியாபாரியிடம் பணம் திருட்டு
பெங்களூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்த வியாபாரியின் பணம் திருட்டு போனது. #Robberycase
புதுச்சேரி:
டெல்லியை சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (வயது 48). வியாபாரி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபார விஷயமாக பெங்களூர் சென்றார். பின்னர் நேற்று புதுவை வெங்கட்டா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பஸ்சில் வந்தார்.
புதிய பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு தான் கொண்டு வந்த கைப்பையை திறந்து பார்த்த போது, அவர் வைத்திருந்த ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
பெங்களூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்த போது யாரோ மர்ம நபர்கள் கைப்பையில் வைத்திருந்த பணம்- நகையை திருடி உள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து சந்தீப் ஜெயின் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Robberycase
Next Story






