என் மலர்
செய்திகள்

மதுரையில் போலீஸ் சூப்பிரண்டு காரில் செல்போன்கள் திருட்டு
ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு காரில் இருந்த 3 செல்போன்கள் மற்றும் பாஸ்போர்ட்டை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர்.
மதுரை:
மதுரை பொன்மேனி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சென்றாய பெருமாள் (வயது 73). ஒய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு.
இவர் நேற்று காலை காரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று விட்டு மதுரை திரும்பினார். காளவாசல் பைபாஸ் சாலையில் வந்த போது, காரை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றார்.
டீ குடித்து விட்டு காருக்கு திரும்பிய சென்றாய பெருமாள், காரில் இருந்த 2 ஐபோன்கள், ஓரு செல்போன் மற்றும் பாஸ்போர்ட்டு மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவர, எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு காரில் கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
Next Story






