search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.

    இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நிலை இரண்டாம் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல் முதல் நிலை இரண்டாவது அலகில் பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதல்நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை பழுது செய்யப்பட்டு அந்த அலகில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதையடுத்து அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது.
    Next Story
    ×