search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி பசுமை சாலை - மத்திய அரசின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு
    X

    8 வழி பசுமை சாலை - மத்திய அரசின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

    அரூர் வழியாக செல்லும் சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை பணிகள் குறித்து முதுநிலைப் பொறியாளர்கள் மது பாபு, தருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    கம்பைநல்லூர்:

    சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

    இந்த சாலை அமைப்பதற்கான நிலம் சர்வே செய்யும் பணிகள், எல்லைக்கல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, பசுமை வழிச்சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், தென்னை மரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பசுமை வழிச்சாலையில் நடைபெறும் அடுத்த கட்டப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முதுநிலைப் பொறியாளர்கள் மது பாபு, தருண் ஆகியோர் அடங்கிய குழுவினர் எருமியாம்பட்டி, மாலகபாடி உள்ளிட்ட கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, விவசாயிகளின் கோரிக்கைகள், அரசு கையப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது அரூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார் உடனிருந்தார்.


    Next Story
    ×