என் மலர்
செய்திகள்

உள்ளாட்சிக்கு மக்கள் பிரதிநிதி தேவை இல்லையென்றால் - தமிழக அமைச்சர்கள் பதவி விலகலாம் - ப.சிதம்பரம்
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அமைச்சர்கள் பதவி விலகலாம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram
சென்னை:
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிகாலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்?
அ.தி.மு.க.விற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்?
தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் (ஜனாதிபதி ஆட்சி) ஆட்சியை ஒப்படைக்கலாமே?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Chidambaram
Next Story