search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    300 மணல் லாரிகள் சிறை பிடிப்பு- கிராம மக்கள் போராட்டம்
    X

    300 மணல் லாரிகள் சிறை பிடிப்பு- கிராம மக்கள் போராட்டம்

    மீஞ்சூர் அருகே 300-க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல், தத்தைமஞ்சி ஏரி, சவுடுமண் குவாரிகளில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

    இந்த நிலையில் மணல் லாரிகளால் மீஞ்சூர் நகரம் முழுவதும் தூசி பரவுகிறது, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது என்றும் காலை, மாலை வேளைகளில் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் மணல் குவாரிகளை காலை 10 மணிக்கு மேல் இயக்கவும், மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மணல் எடுப்பதை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மீஞ்சூர் காட்டுச்சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வராததால் அங்கு பரபரப்பு நிலவியது.

    அதன்பிறகு மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
    Next Story
    ×