என் மலர்
செய்திகள்

ஊத்துக்கோட்டையில் விடிய விடிய பலத்த மழை
ஊத்துக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். #Rain
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 மாதம் காலமாக கடும் வெயிலின் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் பலத்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயிலின் காரணமாக ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பல ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டன. தற்போது பெய்துள்ள பலத்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #Rain
Next Story






