search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னவனூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு பீன்ஸ், வாழைகள் சேதம்
    X

    மன்னவனூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு பீன்ஸ், வாழைகள் சேதம்

    மன்னவனூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு பீன்ஸ், வாழைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூம்பூர், கீழான வயல், பூம்பாறை ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், முருங்கை மற்றும் மலை வாழைகள் பயிரிட்டுள்ளனர்.

    இப்பகுதி மலைவாழைப்பழங்கள் சுவை மிகுதியாக இருக்கும். மேலும் மருத்துவகுணம் கொண்டது என்பதால் சுற்றுலா பயணிக் இதனை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கிருந்து ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மன்னவனூர் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இந்த காற்றுக்கு பீன்ஸ், வாழைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    தற்போது சேதமடைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். #tamilnews

    Next Story
    ×