என் மலர்
செய்திகள்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கினார்
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன். இவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று பின்னர் விடுதலையானார்.
இந்த நிலையில் கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய கட்சி தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது.
புதிய கட்சி தொடக்க விழாவுக்கு வந்த கர்ணன் அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் கட்சியை தொடங்கி கொடியை அறிமுகம் செய்தார். கொடியின் மேலே நீல நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும், கீழே பச்சை நிறமும் இடம் பெற்றுள்ளது.
நடுவில் ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுப்பதை தடுப்பது போன்ற சின்னம் இடம் பெற்றுள்ளது. அந்த சின்னத்தின் மேலே ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி என்றும், லஞ்சத்தை வேரறுப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
கட்சி தொடக்க விழாவில் கர்ணன் பேசியதாவது:-
“நம் நாட்டில் ஊழலை ஓழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். அரசு துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். எங்கள் கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.
இனி வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். கட்சி அலுவலகங்களையும் திறப்போம்.
ஜாதி, மதம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர். கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன்.
மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழல் ஒழிப்பு செய லாக்க கட்சியின் தலைவராக கர்ணன் செயல்படுவார். பொதுச்செயலாளராக அந்தோணி லிப்ரோ, பொருளாளராக ராகுல் இஸ்லாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #JusticeKarnan #JudgeKarnan

Next Story