search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சநத்தம் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - நல்லகண்ணு
    X

    கச்சநத்தம் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - நல்லகண்ணு

    கச்சநத்தம் கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
    மானாமதுரை:

    கச்சநத்தம் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாற்று சமுதாயத்தினரால் கொலை செய்யப்பட்ட மூவரது வீடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    கச்சநத்தம் கிராமத்தில் நடந்துள்ள கொலைகள் காட்டு மிராண்டித்தனமானது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திலிருந்து வெளியேறி செல்ல முடியாமல் உள்ளனர்.

    இவர்களது வாழ்வாதாரத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு காவல்துறை முக்கிய காரணமாகும். கச்சநத்தம் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.குணசேகரன், தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர் முத்தையா, மாவட்டச் செயலாளர் கண்ணகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
    Next Story
    ×