என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்
  X

  துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

  அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

  நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
  Next Story
  ×