search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிபட்டது
    X

    சிதம்பரம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிபட்டது

    சிதம்பரம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய 10 அடி நீளம் கொண்ட முதலை பிடிபட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் குமராட்சிக்கு செல்லும் சாலையில் உள்ள ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதில் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் முதலை ஒன்று கிடந்தது. நேற்று மதியம் அந்த முதலை வாய்க்காலை விட்டு வெளியே வந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனசரகர் சிதம்பரம், வன காப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை பயமுறுத்திய முதலையை பிடித்தனர்.

    பிடிபட்ட முதலை 10 அடி நீளம் இருந்தது. அந்த முதலையை சிதம்பரத்தில் உள்ள வக்காரமாரி ஏரியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர். 

    Next Story
    ×