என் மலர்

  செய்திகள்

  புதுவை தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
  X

  புதுவை தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் வருகிற 19-ந் தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
  புதுச்சேரி:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்தினார்.

  இதனைத்தொடர்ந்து தி.மு.க. அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்த உள்ளார்.

  இதையடுத்து புதுவை வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வருகிற 19-ந் தேதி புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்துகிறார்.

  அன்று காலை 8 மணிக்கு புதுவை வடக்கு, தெற்கு நிர்வாகிகளுடனும், பிற்பகல் 2 மணிக்கு காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளுடனும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதில் மாநில, தொகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

  Next Story
  ×