என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் சூசையப்பர் ஆலயத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டினத்தில் உள்ள சூசையப்பர் ஆலயத் தில் திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
வாடிவாசல் வழியாக காளைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக விழாக் குழுவினர் அவிழ்த்து விட்டனர். போட்டியில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் சேலம், கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 300 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சூசையப்பர்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு ஜல்லிகட்டு போட்டியை ரசித்து பார்த்தனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள் மற்றும் அடங்காத காளை மாட்டு உரிமையாளர்களுக்கு கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், சேர், தங்க காசுகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிகட்டில் போட்டியில் பிராஞ்சேரி கண்ணன், சோழங்குறிச்சி வேல்முருகன், சூரியா, காடு வெட்டாங் குறிச்சி அன்பு மொழி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.

Next Story