என் மலர்
செய்திகள்

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அரசுக்கு ரூ.4½ கோடி வருமானம் இழப்பு
புதுவையில் தனியார் படகு துறை அமைப்பதை கண்டித்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களின் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுக்கு இதுவரை ரூ.4½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தனியார் படகு துறையின் அனுமதியை ரத்து செய்ய கோரி கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா கழகத்தின் நீர் விளையாட்டு பிரிவு ஊழியர்கள் தொடங்கிய போராட்டத்திற்கு அனைத்து சங்கங்கங்களும் ஆதரவு அளித்தனர். இதனால் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சீகல்ஸ், லேகபே ஆகிய உணவகங்களும், நோணாங்குப்பம், வேல் ராம்பட்டு, கனகன்ஏரி உள்ளிட்டவற்றின் படகு குழாமும் மூடிக்கிடக்கிறது.
கோடை விடுமுறையினால் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் படகு குழாம் மூடிக்கிடப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்த்துடன் திரும்புகின்றனர்.
இன்று 9-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் போராட்டத்தால் அரசுக்கு இதுவரை ரூ.4½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கஜபதி கூறியதாவது:-
10 நாட்களாக போராட்டம் நடந்தும் இதுவரை அரசு தரப்பில் கண்டு கொள்ளவில்லை. தனியார் படகு குழாம் அமைப்பதில் ஆளுங்கட்சியினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதனாலேயே எங்கள் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும், தனியார் படகு குழாமின் ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு கஜபதி கூறினார்.

Next Story