என் மலர்
செய்திகள்

ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி நேபாளத்துக்கு தப்பியோட்டம்
விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சபீன்லால் சந்த் நேபாளத்துக்கு தப்பியோடினார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக வங்கி செயல்படும் கட்டிடத்தின் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த சபின்லால் சந்த் தனது மகனுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஐ.ஓ.பி. வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சபின்லால் சந்த் நேபாளத்துக்கு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறுகையில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது சபீன்லால் நேபாளத்துக்கு தப்பியது தெரிய வந்தது.
மேலும், சபீன்லாலுக்கு கார் கொடுத்து உதவியதாக பெங்களூருவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். #Tamilnews
Next Story