என் மலர்
செய்திகள்

கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகளை நெல் கோட்டையாக கட்டி ஊர்வலம்
வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகளை நெல் கோட்டையாக கட்சி தலையில் சுமந்து சென்று கோவிலில் வைத்து பக்தர்கள் வழிப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரரர் கோவில் 1500 ஆண்டுகளுக்கும்மேல் பழமையானது. பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிவபெருமான் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களை பொதுமக்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் குன்னலூர் கிராமத்தில் 1500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இதில் விளைந்த நெல் மணிகளை ஆண்டுதோறும் முதலில் நெல் கோட்டையாக கட்டி கோவிலில் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதுபோல் இவ்வாண்டும் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்த நெல் மணிகளை நெல் கோட்டையாக கட்டி இன்று காலை வேதாரண்யம் கொண்டு வந்தனர். அங்கு மேலவீதியில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் நெல் மணிகள் நிறைந்த நெல் கோட்டையை தலையில் சுமந்து ஊர்வலமாக வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவந்து சன்னதியில் வைத்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி சுவாமிகள் அதனை பக்தர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அந்த நெல் கோட்டையை எடுத்து சென்று காயவைத்து அரைத்து பொங்கல் சமைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவர்.

Next Story