என் மலர்
செய்திகள்

உத்தமபாளையம் அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை மரணம்
தேனி:
உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது25). இவரது மனைவி வீரம்மாள் (22). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.
சம்பவத்தன்று குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை உத்தமபளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே உள்ள எரப்பட்ட நாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மீனா (37). இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட மீனா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






