என் மலர்

    செய்திகள்

    நெட்டப்பாக்கம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி சுருண்டு விழுந்து பலி
    X

    நெட்டப்பாக்கம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி சுருண்டு விழுந்து பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெட்டப்பாக்கம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி சுருண்டு விழுந்து இறந்து போனார்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பாக்கம்கூட்டுரோடு அருகே பள்ளி புதுப்பட்டு காலனியை சேர்ந்தவர் தவமணி (வயது53).கரும்பு வெட்டும் தொழிலாளி. நேற்று இவர் அதே பகுதியை சேர்ந்த 10 பேருடன் கல்மண்டபம் கிராமத்தில் கரும்பு வெட்ட சென்றார்.

    கரும்பு வெட்டிய பின்பு அங்குள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது அங்கு திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் தவமணியை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தவமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து தவமணி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×