என் மலர்

  செய்திகள்

  சிறுமி ஹாசினி, தாய் சரளாவை கொலை செய்யவில்லை: தஷ்வந்த் பல்டி
  X

  சிறுமி ஹாசினி, தாய் சரளாவை கொலை செய்யவில்லை: தஷ்வந்த் பல்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுமி ஹாசினி மற்றும் தாய் சரளாவை கொலை செய்யவில்லை என தஷ்வந்த் திடீர் பல்டி அடித்து கூறி இருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

  செங்கல்பட்டு:

  குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். இவர் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்து உடலை எரித்தார்.

  இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த 2-ந் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பினார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது புழல் சிறையில் அடைத்தனர்.

  ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஷ்வந்தை தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வருகிறார்கள்.

  இந்த விசாரணையின் போது மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் தலையாரி, ஹாசினியின் பக்கத்து வீட்டு பெண், ஹாசினி படித்த பள்ளியின் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோரிடம் நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார்.

  இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்த தஷ்வந்தை பலத்த பாதுகாப்புடன் போலீசார் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

  அப்போது போலீஸ் வேனில் இருந்து இறங்கிய தஷ்வந்த் நிருபர்களிடம் கூறும்போது, ‘சிறுமி ஹாசினி, எனது தாய் சரளாவை நான் கொலை செய்யவில்லை. அனுமதி பெற்று செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தால் பேட்டி அளிக்கத் தயார்’ என்றார்.

  இதைத் தொடர்ந்து நீதிபதி வேல்முருகன் முன்பு தஷ்வந்தை போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு தஷ்வந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, ‘விசாரணை வேண்டாம், எனக்கு தண்டனை கொடுங்கள்’ என்றார்.

  ஆனால் தற்போது ஹாசினியையும் தனது தாய் சரளாவையும் கொலை செய்யவில்லை என தஷ் வந்த் திடீர் பல்டி அடித்து கூறி இருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

  இதையடுத்து தஷ்வந்துக்கு எதிரான சாட்சியங்களை பலப்படுத்தவும், புதிய சாட்சிகளை சேர்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  Next Story
  ×