என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் ரே‌ஷன்கடை விற்பனையாளர் பதவிக்கு 11 ஆயிரம் பேர் போட்டி
    X

    காஞ்சீபுரத்தில் ரே‌ஷன்கடை விற்பனையாளர் பதவிக்கு 11 ஆயிரம் பேர் போட்டி

    காஞ்சீபுரத்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் 11 ஆயிரம் பேர் ரே‌ஷன்கடை விற்பனையாளர் பதவிக்கு போட்டியிட உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகர் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 145 ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் இது வரை 11 ஆயிரம் விண்ணப்பங்களை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றுள்ளனர்.

    இந்த விண்ணப்பங்களை பெற வருகிற 21-ந்தேதி கடைசி நாள். பிறகு நேர்முகதேர்வு மூலம் விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×