search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
    X

    கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

    திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் பெண்கள் பள்ளியில் உள்ள கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மா.பொ.சி. நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பில் உள்ள தலைவர் மற்றும் துணை தலைவராக உள்ள மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவிகள் தினந்தோறும் கழிவறையை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கையால் சுத்தம் செய்து வந்தனர். இதனால் மாணவிகள் மிகவும் மனவேதனை அடைந்தனர். இதுபற்றி அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இந்த தகவல் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பள்ளியில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் இன்று விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில், விசாரணை முடிந்ததை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    Next Story
    ×