என் மலர்

  செய்திகள்

  ரூ.111 கட்டணத்தில் திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்
  X

  ரூ.111 கட்டணத்தில் திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.111 கட்டணத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு கார்த்திகை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
  திண்டுக்கல்:

  திருக்கார்த்திகை தீபத் திருவிழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டாலும் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலையில் சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 2-ந் தேதி காலையில் பரணி தீபமும் மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதனை காண லட்சக்கணக்கான பகதர்கள் கூடுவது வழக்கம்.

  தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வருகிற 1, 2-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி 1-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர் வழியாக விருதுநகருக்கு 7.30 மணிக்கும், மதுரைக்கு 8.55 மணிக்கும் வந்தடைகிறது.

  அதன் பிறகு நிறுத்தம் ஏதுமின்றி திண்டுக்கல்லுக்கு 9.55 மணிக்கு வருகிறது. தொடர்ந்து திருச்சி, விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக மறு நாள் காலை 7 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. இதே போல் மறு மார்க்கத்தில் டிசம்பர் 2-ந் தேதி இரவு 11.30 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் காலை 7.41 மணிக்கு திண்டுக்கல் வந்தடைகிறது.

  இந்த ரெயிலில் முன் பதிவற்ற பயணத்துக்கு ரூ.111 கட்டணமும், தூங்கும் வசதிக்கு ரூ.375, ஏசி, மூன்றடுக்கு பயணத்துக்கு ரூ.1300, ஏசி 2 அடுக்கு பயணத்துக்கு ரூ. 1,414, ஏசி முதல் வகுப்புக்கு ரூ.1,789 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் 58 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×