search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்ப்பரேட் கம்பெனி நலனுக்காக கொண்டுவரப்பட்டது தான் ஜி.எஸ்.டி.: ஜி.ராமகிருஷ்ணன்
    X

    கார்ப்பரேட் கம்பெனி நலனுக்காக கொண்டுவரப்பட்டது தான் ஜி.எஸ்.டி.: ஜி.ராமகிருஷ்ணன்

    ஜி.எஸ்.டி. சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக தான் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் நடுத்தர மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை வின்சென்ட் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகரின் இல்லத்திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று கோவை வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க அ.தி.மு.க.வின் 3 கோஷ்டிகளும் போட்டி போட்டுக் கொண்டுள்ளன. இதனால் தமிழக மக்களின் நலனை அரசு காக்க தவறி விட்டது.

    கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தாக்கியது காட்டு மிராண்டித்தனமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்களை தாக்கிய போலீசார் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



    பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆர்.எஸ்.சின் வெறுப்பு பிரசாரமே காரணமாகும். மதமோதல்கள் ஏற்படுத்தும் சங்பரிவார் அமைப்புகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுத்தா மற்றும் ஆவணக்கொலையை தடுத்து நிறுத்த புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×