என் மலர்

  செய்திகள்

  பாலக்காடு அருகே பஸ்சில் தங்க நகை கடத்தல் - கோவையை சேர்ந்தவர் கைது
  X

  பாலக்காடு அருகே பஸ்சில் தங்க நகை கடத்தல் - கோவையை சேர்ந்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலக்காடு அருகே பஸ்சில் கடத்தி வந்த 1 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோவையை சேர்ந்தவர் ஒருவரை கைது செய்யப்பட்டார்.
  கொழிஞ்சாம்பாறை:

  கோவையில் இருந்து நேற்று கேரளாவுக்கு அரசு பஸ் புறப்பட்டது. பாலக்காடு மதுவிலக்கு அதிகாரி பிரஷோப் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

  கோவையில் இருந்து வந்த பஸ்சை வழிமறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்து ஒருவர் இறங்கி ஓட முயன்றார். அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 1ž கிலோ தங்க நகைகள் இருந்தன.

  நகைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. விசாரணையில் அவர் கோவை குனியமுத்தூர் திருநகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 52) என்பது தெரியவந்தது.

  இதனையடுத்து 1ž கிலோ நகையை பறிமுதல் செய்த போலீசார் கைது சீனிவாசனை செய்தனர்.
  Next Story
  ×