என் மலர்
செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: சினிமா டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு
ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சினிமா டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வரி விகிதம் முடிவு செய்யப்பட்டது. 4 விகிதங்களில் பொருட்களுக்கு சேவை வரி விதித்துள்ளனர். அதில் சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நிர்ணயங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
28 சதவீத வரி விதிப்பால் சினிமா டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆக உள்ளது. இதில் நுழைவுக்கட்டணம் ரூ.83.3 கேளிக்கை கட்டணம் ரூ.35.7, பராமரிப்புக்கு ரூ.1 என்று நிர்ணயித்துள்ளனர்.
இனி இந்த கட்டணம் ரூ.153 ஆக உயரும் என்று கூறுகின்றனர். தற்போதைய கட்டணத்தை விட 28 சதவீதம் கட்டணம் உயர்வாக இருக்கும் என்றும் தற்போதைய கட்டணத்தில் 30 சதவீதமாக இருக்கும் பொழுதுபோக்கு கட்டணம் தான் இனி 28 சதவீதமாக குறையும் என்றும் கூறுகின்றனர்.
சரியான அறிவிப்புகள் இல்லாததால் டிக்கெட் கட்டணத்தை கணக்கிடுவதில் குழப்பமாக இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறும் போது, வரி உயர்வு நல்லதல்ல. சாதாரண மக்களின் சுமையைத்தான் அதிகரிக்கும் என்றார்.

Next Story