என் மலர்

  செய்திகள்

  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி: போலீஸ் விசாரணை
  X

  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி: போலீஸ் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரிமங்கலம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திடீரென பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தும்பல அள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் தமிழரசன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

  வழக்கம் போல் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தமிழரசன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து பெற்றோரிடம் எனக்கு மயக்கமாகவும், கண் இருட்டாகவும் தெரிகிறது என்று கூறினார். சிறிது நேரத்தில் வாயில் இருந்து நுரையும் தள்ளியது.

  இதனால் பதறி துடித்த பெற்றோர் உடனடியாக மகன் தமிழரசனை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

  பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தமிழரசன் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

  இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தன்று மாணவன் தூங்கிய சமயத்தில் அவரை ஏதேனும் வி‌ஷப் பூச்சிகள் கடித்ததா? அல்லது வி‌ஷப் பாம்பு கடித்ததா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×